சேட்டக்காரப்பய…

5981541839_831dfbe283_z

குழந்தைகள் வீட்டில் இருக்கையில் வீடே அமளி துமளியாவதும் அவர்கள் பள்ளிக்குப் போன பின்னர் வெறிச்சோடிக் கிடப்பதாக உணர்வதும் நமது அனுதின அனுபவம். குழந்தைகள் செய்யும் சின்னச் சின்னக் குறும்புகள்தான் நமக்கு ஆனந்தத்தைத் தருகின்றன. ஆனால் மிதமிஞ்சிய சுறுசுறுப்போ, பரபரப்போ, சேட்டையோ குழந்தைகளிடம் இருக்கவே கூடாது. அது ஆபத்து என்று எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

தமிழர் வரலாற்றில் ஒரு ஒரிஜினல் ஆக்‌ஷன் கிங்!

nedu

தியேட்டரில் நண்டு சிண்டுகளின் விசில், ஆரத்தி மற்றும் ஆரவாரங்களுக்கிடையில்; விட்ட ஒரே உதையில் பத்துபேர் மேலே பறந்து சுழன்று கொண்டிருக்க, புழுதி பறக்க, தீம் மியூசிக் ஒலிக்க, ஸ்லோ மோஷனில் வீரநடை போட்டு வருபவர்தான் இன்றைய தமிழ் சினிமா ஹீரோ. ஆனால் தொலைத்தொடர்பு வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலங்களில் அதே ஹீரோ எங்காவது எக்கச்சகமாக சிக்கிக்கொண்டு பயந்து தெறித்து ஒடுவதை யாராவது செல்போனில் படமெடுத்து இணையத்தளத்தில் போட்டு, பாவம் அவர் மானத்தை வாங்கிவிடுகிறார்கள். அறி(வு)வியல் வளர்ச்சியால் செல்லுலாய்டு நாயகர்களின் பிம்பம் உடையத் துவங்கி இருக்கிறது.

மலேசிய விமானம், உக்ரேன், மசெராட்டி, குத்தீட்டி மற்றும் இலுமினாட்டி

ilu_title

இலுமினாட்டி பற்றி தெரியாதவர்கள் முதல் முறையாக தெரிந்து கொள்ளும் நாளில் தூக்கத்தைத் தொலைப்பது நிச்சயம். தெரியாதவர்களுக்காக இலுமினாட்டி பற்றி ஒரு சிறு அறிமுகத்துடன் கட்டுரையை தொடங்குகிறேன். உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வதேச நாட்டாமைகள்தான் இலுமினாட்டிகள். உலக அரசியல் அமைப்புகள், மதங்கள், வங்கிகள், ஹாலிவுட், மீடியாக்கள், நுகர்பொருட்கள் எல்லாம் எல்லாம் இவர்களது கையில். எதெல்லாம் இவர்களுடையது என்று ஆராய்வதைவிட எதெல்லாம் இன்னும் இவர்களுக்கு சொந்தமாகவில்லை என்பதை வேண்டுமானால் எளிதாக எண்ணிவிடலாம். இன்றைய உலகைப் பொறுத்தவரை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் அழித்தலும் இவர்கள் கையில்.

பழபஜ்ஜி செய்முறை

palabajji

நீங்கள் நாகர்கோவில் வடசேரி பஸ்டாண்டில் வந்து இறங்கினவுடனே பஸ்டாண்டுக்குள் உங்களை வரவேற்கும் டீ கடைகளில் நேந்திரம் பழபஜ்ஜி அடுக்கி வைத்திருப்பார்கள். ஒரே ஒரு பஜ்ஜி சாப்பிட்டு, டீ குடித்தால் பசி அடங்கிவிடும். பஜ்ஜி அவ்வளவு பெரிதாயிருக்கும். சுவையாகவும் இருக்கும். நேந்திரம் பழத்தை தோலை நீக்கி குறுக்காக வெட்டி அதில் அவல், வெல்லம் மற்றும் தேங்காய்ப்பூ stuff செய்து பஜ்ஜிமாவில் முக்கி பொறித்தெடுப்பதுதான் பழபஜ்ஜி. இது கேரளாவில் மிகப் பிரபலம்.

பழைய டிவி பெட்டிக்கு குட்பை

old_tv

டிவியில் தெளிவாக படம் தெரிய மொட்டை மாடிக்குப் போய் ஆண்டனாவை சுழற்றி சரிசெய்த கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். மொட்டை மாடியில் ஆண்டனாவை சரிசெய்பவர் “இப்பஇப்ப” என்று கத்த கீழே வீட்டுக்குள்ளிருந்து  “இன்னும் இல்ல இப்ப ஓகே.. பழையபடி போச்சு” என பதில் சத்தங்கள் கேட்கும். வெள்ளிக்கிழமை இரவு ரூபவாஹினியில் தமிழ் படம் பார்க்க மதுரையிலிருந்து ஆண்டனாவை சரிசெய்து புள்ளிகளுக்கு நடுவே படம் பார்த்து இரசித்த காலங்களும் உண்டு.

மாயன்களின் ராக்கெட் ராஜா- விலகும் மர்மம்

rocket_aja

மாயன்களையும் மர்மங்களையும் பிரிக்கவே முடியாது. மாயன்களுக்கு அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய வேற்றுக் கிரகவாசிகளோடு தொடர்பிருந்திருக்கிறது, அவர்கள் இவர்களுக்கு வானியல் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பங்களை அப்போதே கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என்று சிலர் உறுதியாக நம்புகின்றனர். அதற்கு ஆதாரமாக இவர்கள் காட்டுவது மாயன்கள் வாழ்ந்த பகுதிகளில் புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்த ஒவியங்கள் மற்றும் சிற்பங்களாகும்.